செய்திகள் :

ராமதாஸ், அன்புமணி தனது அறையில் ஆஜராக சொல்லும் நீதிபதி! - இன்று மாலை நடக்குமா அந்த சந்திப்பு?

post image

பாமக-வில் தந்தை-மகன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இருவர் தரப்பிலும் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

நான் தான் தலைவர்

அதில், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே மாதம் 30ம் தேதியில் இருந்து அவர் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்தால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மற்றும் கட்சி நிர்வாக பொறுப்பு உள்ளிட்டவை கட்சியின் நிறுவனருக்கே உள்ளது என கடந்த ஜூலை ஏழாம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு , செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமதாஸ்
ராமதாஸ்

செயல் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், குழப்பம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதாகவும், தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும் மனுவில் விமர்சிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவரும், நிறுவனருமான ராமதாஸின் அனுமதியில்லாமல் அன்புமணி 100 நாள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருவதாகவும் இதற்கெதிராக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்னை

இந்நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் ஒன்பதாம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் அன்புமணி அறிவித்துள்ளார்.

மேலும், அன்புமணியின் இந்த அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

எனவே, அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை 5:30 மணிக்கு தனது அறையில் நேரில் ஆஜராக கேட்டுக்கொண்டார்.

பாமக-வில் பிரச்னை வெடித்த பின்னர் ராமதாஸ் அன்புமணி ஆகியோர் சந்தித்துகொள்ள வில்லை. இந்த நிலையில் நீதிபதி ஆஜராக கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு அவர்கள் நேரடியாக செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"வாக்குச்சாவடி வீடியோக்களை ஏன் அழிக்கிறீர்கள்?" - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தியின் 5 கேள்விகள்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2024 மக்களவை தேர்தல் மற்றும் அதற்கடுத்த 4 மாதங்களில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பா.ஜ.க-வுடன் சேர்ந்து இந்திய அர... மேலும் பார்க்க

திமுக: மீண்டும் எழுந்த `மாவட்ட பிரிப்பு’ பேச்சு - ஆர்வம் காட்டும் உதயநிதி; அறிவாலய அப்டேட்ஸ்!

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்களே இருக்கின்றன. ஆளும் திமுக, `ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை தொடங்கி `உடன்பிறப்பே வா’ என்ற நிர்வாகிகள் சந்திப்புவரை தேர்தலுக்கு முழு ஆயுதமா... மேலும் பார்க்க

"அலங்காரத்திற்காக மாநில கல்விக் கொள்கை என்று நாடகமாடுகிறது திமுக" - அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக மாநில கல்விக்கொள்கையை இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் இதனை விமர்சித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்க... மேலும் பார்க்க

"முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி பழனிசாமி வாய் திறக்காதது ஏன்?" - அமைச்சர் துரைமுருகன்

வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் மற்றும் ஆளும் பாஜக மீது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இந்நிலையில், ... மேலும் பார்க்க

பாகிஸ்தான், இஸ்ரேல் வரிசையில் கம்போடியா - ட்ரம்பிற்கு நோபல் பரிசு பரிந்துரை - காரணம் என்ன?

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்கு பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு, 'நோபல் பரிசு ஆசை' ரொம்பவே வந்துவிட்டது என்று கூறலாம். பாகிஸ்தான் ஆரம்பித்த ஒன்று! இந்தத் தீயை முதன்முதலில் பற்ற வைத்த... மேலும் பார்க்க

`போராடும் தூய்மை தொழிலாளர்களை அழைத்து பேச ஒரு அதிகாரி கூட இல்லை; இதுவா வளர்ச்சி?’ - சீமான் காட்டம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நெசவாளர் வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைமை ஒ... மேலும் பார்க்க