செய்திகள் :

``ராமதாஸ் குறித்து முதல்வர் கருத்து ஆணவ பதிலா...?" - விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?

post image

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதானி - திமுக உறவு குறித்து ராமதாஸ் கேள்வி எழுப்பியது தொடர்பாக கேட்கப்பட்டது. அப்போது முதல்வர் ஸ்டாலின், ``பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அவருடைய அறிக்கைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" எனக் குறிப்பிட்டார்.

விகடன் கருத்துக்கணிப்பு

இதற்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ``ஆட்சியில் இருப்பதால் ஆணவத்தில் ஆடக்கூடாது. பதில் சொல்ல வேண்டிய இடத்தில்தான் அதிகாரத்தில் இருப்பவர்கள் இருக்கிறார். அதனால், பா.ம.க நிறுவனர் ராமதாஸை அவமானப்படுத்தியதற்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்புக்கேட்டாக வேண்டும்" எனக் காட்டமாகப் பேசினார்.

இதற்கு பதிலளித்த எம்.பி திருச்சி சிவா, ``ஒருமுறை பா.ம.க நிறுவனர் ராமதாஸ், `என் தகுதிக்கு நான் போய் இவரை சந்திப்பதா...' என முதல்வரை சந்திப்பது குறித்துப் பேசினார். ஒரு கட்சியின் தலைவர், மாநிலத்தின் முதல்வர், சிறையிலே அவதிப்பட்டவர், மக்களுக்காக நின்ற ஒருவர். அவரை இப்படி பேசியது சரியா... அவர் மட்டும் இப்படி பேசலாமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

இந்த விவகாரம் தொடர்ந்து விவாதமான நிலையில், நமது விகடன் பக்கத்தில், ``அவருக்கு (ராமதாஸ்) வேறு வேலை இல்லை - அதானியுடன் சந்திப்பு குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினின் பதில்..." எனக் கேள்வி எழுப்பி அதற்கு 'ஆணவப் பதில் (அ) முறையற்ற பதில்' - 'சரியான பதிலே...' - 'கருத்து இல்லை' என மூன்று விருப்பத் தேர்வுகளைக் கொடுத்து கருத்துக் கணிப்பு நடத்தியிருந்தோம்.

இதில் கலந்துக்கொண்ட நமது வாசகர்களில், அதானியுடன் சந்திப்பு குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினின் பதில், 'ஆணவப் பதில் (அ) முறையற்ற பதில்' என 59 சதவிகித வாசகர்களும், 'சரியான பதிலே...' என 35 சதவிகித வாசகர்களும், 'கருத்து இல்லை' என 6 சதவிகித வாசகர்களும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

DMK: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புது பாலம், காரணம் ஏற்புடையதா? Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* இந்தி கற்பிப்பவர்களை நிர்மலா சீதாராமன் கேலி செய்தார்.* வட இந்திய எம்.பி.க்களை தமிழில் கோஷம் எழுப்ப திருச்சி சிவா சமாளித்தாரா?* டங்ஸ்டன் சுரங்கம்: மக்களவையில் எஸ்.வேலாய... மேலும் பார்க்க

`விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு' - விருதுடன் முதல்வரிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி

டெல்லியில், கடந்த நவம்பர் 30-ம் தேதி இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில், FICCI Turf 2024, 14-வது விளையாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 2024-ம் ஆண்டுக்கான இந்திய விளையாட்டு விருத... மேலும் பார்க்க

Farmers Protest: `விவசாயிகள் பொறுமையை சோதிக்க முயன்றால்...' - மத்திய அரசை எச்சரிக்கும் துணை ஜனாதிபதி

இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.விவசாய விளைபொருள்களுக்கான குறைந்த... மேலும் பார்க்க