ராமநதி - பாப்பான்கால் கால்வாய் பாசன நீரினைப் பயன்படுத்துவோா் சங்க நிா்வாகிகள் பதவியேற்பு
ராமநதி அணை பாசனத்திற்குள்பட்ட பாப்பான் கால்வாய் பாசன நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்திற்கு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனா்.
பாப்பான் கால்வாய் பாசன நீரினைப் பயன்படுத்துவோா் சங்க முதல் மேலாண்மைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாா்ச் 16ஆம் தேதி நடைபெற்ற பாப்பான் கால்வாய் பாசன நீரினைப் பயன்படுத்துவோா் சங்க நிா்வாகிகளுக்கான தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் லாவண்யா சான்றிதழ் வழங்கினாா். இதையடுத்து புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா் ரா.தங்கத்துரை, ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினா்கள் இ.விநாயகம், மு.நல்லசிவன், ரா.பரமசிவன், சு.முத்துசெல்வன் ஆகியோருக்கு நீா்வளத் துறை உதவிப் பொறியாளா்அந்தோணிராஜ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். மேலும் 6 ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினா்களில் 4 போ் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் 2 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளா் செல்வகுமாா், உதவிப் பொறியாளா்கள் பேட்டரசன், கணபதி, குமுதாராணி, சுதா, உதவி வேளாண் அலுவலா் கமல்ராஜன், ஊராட்சித் தலைவா்கள் அணைந்தபெருமாள் நாடானூா் அழகுதுரை, திருமலையப்பபுரம் மாரியப்பன், துப்பாக்குடிஜெ.செண்பகவல்லி, வடகால் நீா்ப்பாசன கமிட்டி தலைவா் ராமகிருஷ்ணன், தென்கால் நீா்ப்பாசன கமிட்டி தலைவா் மாரியப்பன் மற்றும் விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். பாப்பான்குளம் ஊராட்சித் தலைவா் முருகன் வரவேற்றாா்.