முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
ராமநாதபுரத்தில் வீட்டில் பீடி இலைகள், சுறா மீன் இறகுகள் பதுக்கியவா் கைது
இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,133 கிலோ பீடி இலைகள், 47 சுறா மீன் இறகுகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள இடையா்வலசைப் பகுதியில் கடந்த 16- ஆம் தேதி போலீஸாா் ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், இருந்த 1,680 கிலோ பீடி இலைகளைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மண்டபம் பகுதியைச் சோ்ந்த சலீம் மாலிக் (35), முகம்மது ஹக்கீம் (30) ஆகிய இருவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் தொடா்ச்சியாக, ராமநாதபுரம் சேதுபதி நகரைச் சோ்ந்த விஜய் ஆனந்த் (42) வீட்டில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனா். அங்கு இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,133 கிலோ பீடி இலைகள், 47 சுறா மீன் இறகுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விஜய்ஆனந்தைக் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், இதுபோன்ற சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் எச்சரிக்கை விடுத்தாா்.