ராம் கோபால் வர்மா எழுத்தில் புதிய படம்! டிரைலர் வெளியீடு!
இயக்குநர் ராம் கோபால் வர்மா எழுத்தில் புதிய படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘சாரீ’ படத்தின் கதையை ராம் கோபால் வர்மா எழுதியுள்ளார். இந்தப் படத்தினை கிரி கிருஷ்ண கமல் இயக்கியுள்ளார்.
தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் புதிய புரட்சியை உண்டாக்கியவராக அறியப்படும் ராம் கோபால் வர்மா தற்போது படங்கள் எதுவும் இயக்காமல் வணிகத்துக்காக யூடியூப்பில் குறும்படங்களை இயக்கி வருகிறார்.
அடிக்கடி சர்ச்சை கருத்துகளைக் கூறி பிரச்னையில் சிக்குவதும் அவருக்கு வழக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-12/a1rtm0sr/GjlpLTOasAAz6Tg.jpg)
இந்தப் படத்தினை ஆர்ஜிவி ஆர்வி புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ராம் கோபால் வர்மா இந்தப் படத்தினை வழங்கியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஆர்ஜிவி கூறியதாவது:
இந்தப் படம் சமூக வலைதளத்தினால் உண்டாகும் அபாயத்தைப் பற்றியது. அப்பாவியான தொடர்புகள் எப்படி பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றிய படம். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளத்தில் பிப்.28ஆம் தேதி வெளியாகிறது எனக் கூறியுள்ளார்.
ஆராதயா தேவி, சத்யா யது, சாஹில் சம்பயல், அப்பாஜி அம்பரிஷ், கல்பலதா நடித்துள்ளார்கள். சபரி ஒளிப்பதிவில் ஆனந்த் இசையமைத்துள்ளார்.