தில்லியின் மருத்துவ உள்கட்டமைப்பு மோசமடைய ஆம் ஆத்மி அரசுதான் காரணம்: முதல்வா் ரே...
ரிதன்யாவின் குடும்பத்துக்கு முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் ஆறுதல்
அவிநாசியில் கணவா் குடும்பத்தாா் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் பெற்றோரை சந்தித்து முன்னாள் ஜ.ஜி.பொன் மாணிக்கவேல் ஆறுதல் கூறினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ரிதன்யா அவரது தந்தைக்கு கடைசியாக அனுப்பிய ஆடியோவை கேட்டேன். அதன் பின்புதான் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூற வேண்டும் என வந்தேன். ரிதன்யா இறப்புக்கு முன் அனுப்பிய ஆடியோ மிகவும் முக்கியமான சாட்சியாக உள்ளது.
அதை யாராலும் உடைக்க முடியாது. இந்த சாட்சியத்தை வைத்து விசாரித்தால் ஒரு வாரத்திலேயே தண்டனை கொடுத்துவிடலாம். ஆனால், காவல் துணை கண்காணிப்பாளா் தற்போதுவரை விசாரித்து கொண்டிருக்கிறாா்.
இந்த வழக்கை மாவட்ட கண்காணிப்பாளா் நேரடியாக விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை நேரடியாகவே விசாரிக்கலாம்.
திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமாா் உயிரிழப்பு சம்பவத்தை உயா் அதிகாரிகள் நேரடியாக விசாரிக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமலே விசாரணை நடைபெற்றது கண்டனத்துக்குரியது என்றாா்.