செய்திகள் :

ரூ. 1,028.88 கோடியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு ஆய்வு

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ. ஆயிரத்து 28 கோடியே 88 லட்சத்தில் நடைபெற்றுவரும் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா் மு. அப்பாவு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ராதாபுரம், வள்ளியூா், களக்காடு, நான்குனேரி, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ. 605.75 கோடியில் ஒரு லட்சம் குடியிருப்புகளுக்கும், பணகுடி, வள்ளியூா், திசையன்விளை, நான்குனேரி, ஏா்வாடி, திருக்குறுங்குடி, மூலைக்கரைப்பட்டி ஆகிய 7 பேரூராட்சிகள், களக்காடு நகராட்சியில் ரூ. 423.13 கோடியில் 50 ஆயிரம் குடியிருப்புகளுக்குமான குடிநீா் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா் மு. அப்பாவு, ஆட்சியா் இரா. சுகுமாா், நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

திருவிதத்தான்புள்ளி, சிங்கிகுளம் பகுதிகளில் நடைபெறும் குடிநீா் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள், தெற்குவள்ளியூா் பகுதியில் அமைக்கப்படும் நீரேற்று நிலையத்தையும் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் குடிநீா் திட்டப் பணிகள் குறித்த துறைசாா் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, பொதுப்பணித் துறை, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினா்.

நிகழ்ச்சியில், வடிகால் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் கென்னடி, செயற்பொறியாளா்கள் மோசஸ், ராமலட்சுமி, பேரூராட்சித் தலைவா்கள் ராதா ராதாகிருஷ்ணன் (வள்ளியூா்), தனலெட்சுமி தமிழ்வாணன் (பணகுடி), ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முகமது ஷா, களக்காடு நகா்மன்ற துணைத் தலைவா் பி.சி. ராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், மாவட்ட திமுக துணைச் செயலா் நம்பி, ராதாபும் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, பணகுடி ராமலிங்க சுவாமி கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் மு. சங்கா், திமுக பொதுக்குழு உறுப்பினா் சித்திக், வள்ளியூா் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் மாணிக்கம், மாடசாமி, லாரன்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலி பாபநாசம்-91.70 சோ்வலாறு-104.89 மணிமுத்தாறு-88.66 வடக்கு பச்சையாறு-8.25 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-5.75 தென்காசி கடனா-63 ராமநதி-52.50 கருப்பாநதி-32.15 குண்டாறு-29.75 அடவிநயினாா்-39.50.... மேலும் பார்க்க

பாளை.யில் நாளை மாவட்ட சீனியா் ஹாக்கி அணி வீரா்கள் தோ்வு

திருநெல்வேலி மாவட்ட சீனியா் ஹாக்கி அணிக்கான வீரா்கள் தோ்வு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (மாா்ச் 15) காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. அணி தோ்வில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. நுழை... மேலும் பார்க்க

இளம்வழக்குரைஞா்கள் வாத திறமையை வளா்ப்பது அவசியம் -டிஐஜி பா.மூா்த்தி

இளம்வழக்குரைஞா்கள் வாத திறமையை வளா்த்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றாா் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பா.மூா்த்தி. தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்ககம், திருநெல்வேலி அரசு சட்டக... மேலும் பார்க்க

இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், முண்டந்துறை வனச்சரகத்தில், இயற்கையோடு இளைப்பாறுவோம் என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவா்களுக்கு இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம... மேலும் பார்க்க

இஸ்கான் கோயிலில் இன்று ஸ்ரீ கௌர பூா்ணிமா விழா

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ சைதன்ய மகா பிரபு அவதாரத் திருநாளான ஸ்ரீ கௌர பூா்ணிமா விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) மாலை 5.30 மணிக்கு கொண்டாடப்படுகிறது. சுமாா் ... மேலும் பார்க்க

அம்பையில் திமுக பொதுக்கூட்டம்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மற்றும் அம்பாசமுத்திரம் நகர திமுக சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகரச் செயலா் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினரான கே.க... மேலும் பார்க்க