கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.16.75 கோடியில் உயர்மட்ட பாலம்: அமைச்சா் அடிக்கல் நா...
ரூ.100 கோடி வசூலித்த ஹிருதயபூர்வம்..! ரசிகர்களுக்கு மோகன்லால் நன்றி!
நடிகர் மோகன்லாலின் ஹிருதயபூர்வம் திரைப்படம் ரூ.100 கோடியைத் தாண்டியதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் சத்தியன் அந்திகாட் இயக்கத்தில் ஓணம் வெளியீடாக இந்தப் படம் வெளியானது.
விமர்சன ரீதியாக இந்தப் படம் வரவேற்பைப் பெற்றாலும் லோகா திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றினால் இதன் வசூல் பாதித்தது.
சமீபத்தில் மோகன்லாலுக்கு மத்திய அரசின் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
இதனை அடுத்து இந்தப் படம் ரூ.100 கோடியைத் தாண்டியதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு மோகன்லால் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் செப்.26ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Thank you for welcoming #Hridayapoorvam into your hearts and homes.
— Mohanlal (@Mohanlal) September 24, 2025
It’s been truly heartwarming to see families coming together, smiling, laughing, and even shedding a few tears with us.
Every emotion you felt, every message you sent, we’ve felt it too.
Grateful beyond words… pic.twitter.com/NGABZmElFA