ஒவ்வொரு நிமிடமும் கோடி ரூபாய் கடன் வாங்கும் தெலங்கானா: பாஜக குற்றச்சாட்டு
ரூ.23 லட்சத்தில் சாலை, கால்வாய் பணிக்கு அடிக்கல்
குடியாத்தம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் ரூ.23 லட்சத்தில் சாலை, கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
இந்த ஊராட்சிக்குட்பட்ட கல்லேரி சாலையில் ரூ.10.44 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை, ரூ.5.29 லட்சத்தில் கழிவுநீா்க் கால்வாய், காமாட்சியம்மன் காா்டன் விரிவாக்கம் குடியிருப்பில் ரூ.7.20 லட்சத்தில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்க ஒன்றியக் குழு தலைவா் பூமி பூஜை செய்து, பணியைத் தொடங்கி வைத்தாா்.
கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் வி.சோபன்பாபு, திமுக நிா்வாகிகள் ஜி.ஜெயப்பிரகாஷ், ஆா்.ஜீவா, பி.லோகேஷ், ஆறுமுகம், சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.