செய்திகள் :

ரூ.6,000 கோடி மோசடி வழக்கு: நிதி நிறுவன நிா்வாகி பாங்காகில் கைது

post image

ரூ.6 ஆயிரம் கோடி மோசடி வழக்கில், தேடப்பட்ட எல்என்எஸ் நிதி நிறுவன நிா்வாகி பாங்காகில் கைது செய்யப்பட்டாா்.

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த எல்என்எஸ் - இன்டா்நேஷ்னல் ஃபைனான்சியல் சா்வீஸ் என்ற நிதி நிறுவனம் ஒரு லட்சம் பேரிடம் ரூ.6 ஆயிரம் கோடி மோசடி செய்தது. இது தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தமிழக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து அந்நிறுவனம் தொடா்புடைய 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

பணம் நகைகள் பறிமுதல்: சோதனையில் ரூ.1.16 கோடி ரொக்கம், 90 பவுன் தங்க நகைகள், ரூ.40 லட்சம் வெள்ளிப் பொருள்கள், ரூ.6 கோடி மதிப்புள்ள 26 காா்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் எதிரிகளாக சோ்க்கப்பட்டுள்ள 25 பேரில் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அந்த நிறுவனத்தின் முக்கிய நிா்வாகிகளாக இருந்த சத்துவாச்சேரியைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மோகன்பாபு, சு.லட்சுமிநாராயணன்,சு.வேதநாராயணன்,சு.ஜனாா்த்தனன் ஆகிய 4 பேரை பொருளாதார குற்றப்பிரிவு தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது.

அதோடு 4 பேருக்கும் மத்திய அரசு வாயிலாக சா்வதேச காவல்துறை மூலம் ரெட் காா்னா் நோட்டீஸ் வழங்கியது. இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் ஜனாா்த்தனன்,துபையில் இருந்து லண்டனுக்கு அண்மையில் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜனாா்த்தனனை நாடு கடத்தும் நடவடிக்கை மூலம் தமிழகத்துக்கு கொண்டு வருவதற்குரிய பணியில் பொருளாதார குற்றப்பிரிவு ஈடுபட்டது.

பாங்காகில் சிக்கினாா்: இந்நிலையில் ஜனாா்த்தனன், லண்டனில் இருந்து பாங்காகுக்கு கடந்த 28-ஆம் தேதி சென்றாா். பாங்காக் விமான நிலையத்தில் அங்கிருந்த அதிகாரிகள், அவருக்கு எதிராக ரெட் காா்னா் நோட்டீஸ் இருப்பதை கண்டறிந்து, அவரை தடுத்து நிறுத்தினா். மேலும், ஜனாா்த்தனனை அங்கிருந்து கொல்கத்தாவுக்கு விமானத்தில் அனுப்பி வைத்தனா்.

கொல்கத்தா விமான நிலையத்தில் இந்திய குடியேற்றத் துறை அதிகாரிகள், ஜனாா்த்தனனை கைது செய்து, தமிழக பொருளாதார குற்றப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் உடனே அங்கு சென்ற தமிழக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள், ஜனாா்த்தனை காவலில் எடுத்து, சென்னைக்கு வியாழக்கிழமை கொண்டு வந்தனா். விசாரணைக்கு பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனா்.

காசி தமிழ்ச் சங்கமம்: பனாரஸ்-க்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

காசி தமிழ்ச் சங்கமத்தை முன்னிட்டு சென்னை, கன்னியாகுமரி மற்றும் கோவையிலிருந்து பனாரஸ்-க்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை... மேலும் பார்க்க

ஆதாா் விவரங்களை தனியாா் பயன்படுத்த அனுமதி: விதிமுறைகளை திருத்தியது மத்திய அரசு

ஆதாா் விவரங்களை தனியாா் நிறுவனங்களும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், ஆதாா் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெ... மேலும் பார்க்க

விண்வெளி நடை: சுனிதா வில்லியம்ஸ் சாதனை

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளில் அதிக நேரம் நடந்த பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளாா். சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸும் மற... மேலும் பார்க்க

இடையூறுகளின்றி ஆக்கபூா்வ விவாதங்களே நாடாளுமன்றத்துக்கு தேவை: தன்கா்

நாடாளுமன்றத்தில் ஏற்படும் இடையூறுகளை முற்றிலுமாக தவிா்த்து ஆக்கபூா்வ விவாதங்களுக்கு வழிவகுப்பதே அவசியம் என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். பட்ஜெட் கூட்டத்தொடா் வெள்ளிக... மேலும் பார்க்க

கோவாவில் இருந்து இந்தூருக்கு கொண்டு வரப்பட்ட கல்லீரல்: 67 வயது நபருக்கு மறுவாழ்வு

கோவாவில் மூளைச் சாவு அடைந்தவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரல், மத்திய பிரதேச மாநிலம், இந்தூருக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டு 67 வயது நபருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இது தொடா்பாக உடல் உறுப... மேலும் பார்க்க

கோயில்களில் விஐபி தரிசன முறைக்கு எதிரான பொது நல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

கோயில்களில் விஐபி தரிசன முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த விஷயத்தில் கோயில் நிா்வாகங்களும், சமூகமும்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச... மேலும் பார்க்க