சென்னையில் ஓடுதளத்திலேயே விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு
ரெட்ரோவுடன் மோதலா? நானி கூறியதென்ன?
சூர்யாவின் ரெட்ரோ, நானியின் ஹிட் 3 ஒரேநாளில் வெளியாகுவது குறித்த கேள்விக்கு தன்னடக்கமானப் பதிலை நானி அளித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள ரெட்ரோ மே.1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அதே தேதியில் சைலேஷ் கொலானு இயக்கத்தில் நடிகர் நானியின் ஹிட் 3 படமும் வெளியாகவிருக்கிறது. அதனால், இரண்டு படங்களுக்கும் போட்டியா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த கேள்விக்கு நடிகர் நானி கூறியதாவது:
போட்டி அல்ல பார்ட்டி
இது நிச்சயமாகப் போட்டி கிடையாது, ஆனால் ரசிகர்களுக்கு பார்டியாக (கொண்டாட்டம்) இருக்கும். நாம் திரையரங்கிற்கு படங்களைக் கொண்டாட வருகிறோம். ரசிகர்களுக்கு இந்தாண்டு சிறப்பாக இருக்கிறது.
தமிழ் மக்களுக்கு ரெட்ரோ முதன்மையான தேர்வாக இருக்கும். சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் மீது அதிகமான அன்பும் அவர்களது படங்கள் மீது மதிப்பு இருக்கின்றன. சந்தோஷ் நாராயணன் இசை வேறு. நிச்சயமாக ஒரு அற்புதத்தை நிகழ்த்தியிருப்பார்கள் என நம்புகிறேன்.
ரெட்ரோ படம் பார்த்துவிட்டு ஹிட் 3 வந்தீர்களானால், நிச்சயமாக நல்ல அனுபவத்தை அளிப்போம் என உறுதி அளிக்கிறேன்.
தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் மே.1ஆம் தேதி வெளியாகும் இந்தியா முழுவதும் வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.