ரெட்ரோ படத்தில் 15 நிமிட சிங்கிள் ஷாட்..! சூர்யா பெருமிதம்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் ரெட்ரோ படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் இருந்து வெளியான கனிமா பாடல் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. பல நடிகைகளும் இந்தப் பாடலுக்கு நடனமாடினர்.
இந்தப் பாடலின்போது 15 நிமிடங்கள் சிங்கள் ஷாட்டில் (ஒரே ஷாட்டில்) எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நடிகர் சூர்யா பேசியதாவது:
அந்த 15 நிமிட சிங்கிள் ஷாட்டில் நடனமாட வேண்டும், சண்டையிட வேண்டும், உரையாடலும் இருக்கும். இதை ஒட்டுமொத்த படக்குழுவுமே செய்ய வேண்டும்.
இந்த ஷாட்டின்போது கேமிரா நகர்ந்துகொண்டே இருக்கும். பால்கனி, தரைத்தளம், மேல்தளம் என காமிராமேன் நகர்ந்துகொண்டே இருப்பார்.
இந்தக் காட்சியில் பல விஷயங்கள் நடக்கும். உணர்ச்சிகரமான காட்சிகளும் இருக்கும். ஒரே சிங்கிள் ஷாட்டில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இருக்கும்.
நடனம், சண்டைக் காட்சிகள், உரையாடல்கள் என இருப்பதால் அனைவரும் பயிற்சி எடுக்க வேண்டும். தங்களது சிறந்தவற்றைக் கொடுக்க வேண்டும். இதில் ஒரு அறிமுக நடனக் கலைஞரும் இருக்கிறார்.
கனிமா பாடல்தான். இது படத்தின் துவக்கத்தில் வருகிறது. இதில் எல்லாமே கலந்துவரும். திரையரங்கில் பார்க்க இது அனைவருக்கும் சிறப்பான தருணமாக இருக்குமென நினைக்கிறேன் என்றார்.