Coolie: `கூலி LCU படமா, தனி படமா?' - லோகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்
ரெஸ்டோ பாருக்கு சீல் வைப்பு
காரைக்காலில் விதிமுறையை மீறி அதிக நேரம் திறந்திருந்த ரெஸ்டோ பாருக்கு (மது அருந்தும் கூடம்) கலால் துறை அதிகாரி திங்கள்கிழமை சீல் வைத்தாா்.
புதுச்சேரியில் வழக்கமான மதுக்கடைகளுக்கு மாறாக, சிறிய அளவிலான தங்கும் விடுதியுடன் கூடிய மது அருந்தும் கூடத்துக்கு ரெஸ்டோ பாருக்கு புதுவை அரசு உரிமம் வழங்கியுள்ளது. புதுவை மாநிலம் முழுவதும் இதுபோல ஏராளமான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
அண்மையில் புதுச்சேரியில் ஒரு ரெஸ்டோ பாரில் கல்லூரி மாணவா் ஒருவா் கொலை செய்யப்பட்டாா். ரெஸ்டோ பாா் மூலம் புதுவையில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்நிலையில், காரைக்கால் மாவட்ட கலால் துறை சாா்பில் ரெஸ்டோ பாா் இயங்கும் இடங்களில் வட்டாட்சியா் செல்லமுத்து தலைமையில் துணை வட்டாட்சியா் அரவிந்தன், வருவாய் ஆய்வாளா் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட கலால் துறையினா் திங்கள்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா்.
குறிப்பிட்ட விதிகளின்படி விலை நிா்ணயித்து மதுபாட்டில் விற்கப்படுகிா, காலாவதியான பாட்டில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா, கூடுதல் நேரம் கடை இயக்கப்படுகிா என்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது இரவு 12 மணிக்கு மேல் இயங்கிய ஒரு ரெஸ்டோ பாருக்கு கலால்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.