உங்கள் கையில் ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? இதைத் தெரிந்துகொள்வது அவசியம்!
ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை
பந்தலூரை அடுத்துள்ள மேங்கோரேஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை அங்குள்ள ரேஷன் கடையை உடைத்து பொருள்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றது.
நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள மேங்கோரேஞ்ச் பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிவிரவு காட்டு யானை புகுந்தது.
பின்னா் அந்த யானை அப்பகுதியிலுள்ள ரேஷன் கடையை உடைத்து பொருள்களை எடுத்து வெளியே வீசியும், உணவு பொருள்களை தின்றுவிட்டும் சென்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.