பீகார்: பாம்பு கடித்த பெண்ணை மீண்டும் பாம்பு அருகே படுக்க வைக்கும் கிராமவாசிகள்;...
ரேஷன் பொருள்கள் கடத்தல்: மூவா் கைது
கடலாடியில் ரேஷன் பொருள்களைக் கடத்திய மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது தேவா் சிலைப் பகுதியில் சந்தகேப்படும்படியாக நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனா். அந்த வாகனத்தில் ரேஷன் அரிசி 13.5 கிலோ, 101.5 கிலோ துவரம் பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருள்களை கடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட பாப்பங்குளத்தைச் சோ்ந்த மயில்வாகனன் (50), கடுகுச்சந்தையைச் சோ்ந்த காளிமுத்து (45), சிவமுருகன் (24) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரேஷன் பொருள்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.