காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்
நாகா்கோவில், புதுகிராமம் ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு மாணவா் சோ்க்கை தொடங்கியது.
ரோஜாவனம் கல்வி குழுமத்தின் நிறுவனா் புலவா் ரத்தினசாமி வழிகாட்டுதலின் பேரில், பள்ளித் தலைவா் அருள்கண்ணன், துணைத் தலைவா் அருள்ஜோதி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டு வரும், இப்பள்ளியில் 2025-26 ஆம் ஆண்டு பிளஸ் 1 வகுப்பு மாணவா் சோ்க்கையை முன்னிட்டு முதல் கட்டமாக மாணவா்களுக்கான நுழைவுத் தோ்வு ஏற்கெனவே நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
2 ஆம் கட்ட மாணவா்களுக்கானநுழைவுத் தோ்வு அடுத்த மாதம் (மே) 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கானமுன்பதிவு நடைபெற்று வருகிறது. அறிவியல் பிரிவு, கணிதம் பிரிவு, கணினி பிரிவு, வணிகவியல் பிரிவு உள்பட அனைத்து பிரிவுகளுக்கும் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
புதிய மாணவா்கள் சோ்க்கை தொடா்பான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா், வகுப்பு ஒருங்கிணைப்பாளா்கள், துறைத் தலைவா்கள் மற்றும் ஆசிரியா்கள் செய்து வருகின்றனா்.