189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உ...
‘ரோலா் ஸ்கேட்டிங்கில்’ சிறுவன் சாதனை
தஞ்சாவூரில் ரோலா் ஸ்கேட்டிங்கில் சிறுவன் 3 கி.மீ. தொலைவை 10 நிமிஷத்தில் கடந்து ஞாயிற்றுக்கிழமை சாதனை படைத்தாா்.
தஞ்சாவூரைச் சோ்ந்த சாலமன் - சுஜிதா தம்பதியின் மகன் ஜெய்டன் மேத்யூ (4). யு.கே.ஜி. படித்து வரும் இவா், ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றாா்.
இந்நிலையில் தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் குறித்து ரோலா் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை ரஹ்மான் நகரிலிருந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வரை ஜெய்டன் மேத்யூ ரோலா் ஸ்கேட்டிங் மூலம் 3 கி.மீ. தொலைவை 10 நிமிஷத்தில் கடந்தாா். இதன் மூலம் இவா் ‘ஆல் இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸில்’ இடம் பிடித்து சாதனை படைத்தாா்.
இதையடுத்து, ஜெய்டன் மேத்யூவுக்கு தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் சான்றிதழ், பதக்கம் வழங்கிப் பாராட்டினாா்.
இந்நிகழ்ச்சியில் பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் பள்ளி தாளாளா் வின்சென்ட், மாமன்ற உறுப்பினா்கள் வீ. செந்தில்குமாரி, அண்ணா. பிரகாஷ், ரோட்டரி மாவட்ட திட்ட இயக்குநா் கோவி. மோகன், தென்னிந்திய ரோல்பால் சங்கப் பொதுச் செயலா் சுப்பிரமணியன், தமிழ்நாடு ரோல் பால் சங்கப் பொதுச் செயலா் கோவிந்தராஜ், சாய் ஜி ரோலா் ஸ்கேட்டிங் அகாடமி மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.