செய்திகள் :

ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணம் சாம்பியன்ஸ் டிராபியுடன் முடிவுக்கு வருகிறதா?

post image

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கிரிக்கெட் பயணத்தில் மிகவும் கடினமான காலக் கட்டத்தில் உள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடாத கேப்டன் ரோஹித் சர்மா, இரண்டாவது போட்டி முதல் இந்திய அணியுடன் இணைந்தார்.

ரோஹித் சர்மாவுக்கு மட்டுமின்றி, இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் சிறப்பானதாக அமையவில்லை. மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா மீது விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், அவர் சிட்னி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார்.

இதையும் படிக்க: ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம்: ஆஸி. முன்னாள் கேப்டன்

ரோஹித் சர்மாவின் கடைசி டெஸ்ட் போட்டியா?

சிட்னி டெஸ்ட் போட்டியிலிருந்து ரோஹித் சர்மா விலகியதையடுத்து, இந்திய அணியை வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாத பட்சத்தில், மெல்போர்ன் டெஸ்ட் போட்டியே ரோஹித் சர்மாவின் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்திய அணி அடுத்து வருகிற ஜூன் மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கின்றன. அதனால், அந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா?

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்திய அணி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையும் படிக்க: அதிரடியாக விளையாடாதது ஏன்? ரிஷப் பந்த் விளக்கம்!

ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன் பின், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த பிறகு, வங்கதேசத்துக்கு எதிராக ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன் பின், நடைபெறவுள்ள மிகப் பெரிய தொடர் 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையே.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா விளையாடுவார் எனக் கூறப்படுகிறது. அதன் பின், 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மிகப் பெரிய தொடரான ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரின்போது, ரோஹித் சர்மாவுக்கு வயது 40 ஆகிவிடும். அதனால், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரே அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடராக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ரோஹித் சர்மாவின் முடிவு குறித்து ஜஸ்பிரித் பும்ரா கூறியதென்ன?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி கிட்டத்தட்ட இழந்துவிட்ட நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரே ரோஹித் சர்மா முன்னிருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு. சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் பட்சத்தில், ரோஹித் சர்மா சர்வதேச போட்டிகளிலிருந்து விடைபெறுவதற்கு அது மிகவும் சரியான தருணமாக இருக்கும்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்கு ரோஹித் சர்மா வென்று கொடுக்கும் பட்சத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்தபடியாக அணிக்கு இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றுக் கொடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமை ரோஹித் சர்மாவைச் சேரும்.

சுருக்கமாக கூறவேண்டுமென்றால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரே ரோஹித் சர்மா கடைசியாக இந்திய அணியின் ஜெர்சியை அணியும் தொடராக இருக்கும் எனக் கூறலாம்.

ஆப்கானிஸ்தான் போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும்; அரசியல்வாதிகள் வலியுறுத்தல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டுமென பிரிட்டனைச் சேர்ந்த அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேத... மேலும் பார்க்க

இளைஞர்களின் கனவு நனவானது: டி10 டென்னிஸ் லீக் குறித்து யுவராஜ் சிங்!

டி10 டென்னிஸ் லீக் குறித்து முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.டிபிசிபிஎல் (டென்னிஸ் பந்து கிரிக்கெட் பிரிமீயர் லீக்) இந்தப் போட்டிகளை இந்தியாவின் 50 நகரங்களில் நடத்த திட்டம... மேலும் பார்க்க

தென்னாப்பிரிக்க லீக் தொடரில் இந்திய வீரர்களை பார்க்க விரும்பும் ஏபி டி வில்லியர்ஸ்!

தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் இந்திய வீரர்கள் விளையாடுவதற்கு எதிர்காலத்தில் பிசிசிஐ அனுமதிக்கும் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.இந்திய வீரரான தினேஷ் கார்த்தி... மேலும் பார்க்க

டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடர் அறிமுகம்!

டென்னிஸ் பந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்குபெறும் டி10 டென்னிஸ் கிரிக்கெட் தொடரின் அறிமுக விழா நடைபெற்றது.இந்தப் போட்டிகள் மே 26ஆம் தேதி முதல் ஜுன்... மேலும் பார்க்க

இலங்கை டெஸ்ட் தொடரையும் தவறவிடும் ஆஸி. வேகப் பந்துவீச்சாளர்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை பிரபல ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தவறவிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜோஷ் ஹ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பிரீமியர் லீக்: ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன் விலகல்!

பாகிஸ்தான் பிரீமியர் லீக் (பிஎஸ்எல்) தொடரில் இருந்து ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன் உள்பட நட்சத்திர வீரர்கள் 7 பேர் விலகுவதாக அறிவித்துள்ளனர். மேலும், இந்தியாவுக்கு எதிரான தொடர்கள் இருப்பதால், இங்கிலாந்த... மேலும் பார்க்க