BB Tamil 8 Exclusive: சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? - மனம் திறக்கும் விஷ்ணு
ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம்: ஆஸி. முன்னாள் கேப்டன்
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் இன்று (ஜனவரி 3) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
இதையும் படிக்க: அதிரடியாக விளையாடாதது ஏன்? ரிஷப் பந்த் விளக்கம்!
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 40 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 9 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விலகியதையடுத்து, அவருக்குப் பதிலாக அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்பட்டார்.
மீண்டும் விளையாடுவது கடினம்
சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாத நிலையில், ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் அவர் பேசியதாவது: சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடமாட்டார் என்பது அனைவரும் எதிர்பார்த்ததே. கடந்த இரண்டு நாள்களாக நடந்த விஷயங்களிலிருந்து அவர் சிட்னி போட்டியில் விளையாடப் போவதில்லை எனத் தெரிந்தது. அவருக்குப் பதிலாக ஷுப்மன் கில் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்பதும், அணியை பும்ரா கேப்டனாக வழிநடத்துவார் என்பதும் எதிர்பார்த்தவையே.
இதையும் படிக்க: ரோஹித் சர்மாவின் முடிவு குறித்து ஜஸ்பிரித் பும்ரா கூறியதென்ன?
ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இன்னும் அதிக மாதங்கள் இருக்கின்றன. ஜூன் மாதத்துக்கு முன்பாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என நினைக்கிறேன். ரோஹித் சர்மா அவரது கிரிக்கெட் பயணத்தின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறார். அவர் மிகவும் சிறந்த வீரர். அவர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என நினைக்கிறேன் என்றார்.