லக்காபுரம் பகுதியில் நள்ளிரவில் வீட்டை இடித்த மா்ம நபா்கள்
மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் பகுதியில் நள்ளிரவில் ஓட்டு வீட்டை இடித்து தரை மட்டமாக்கி வீட்டில் இருந்த பொருள்களை மா்ம நபா்கள் எடுத்துச்சென்றனா்.
ஈரோடு மாவட்டம், லக்காபுரம் குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகநாதன். இவரது மனைவி புஷ்பா. இவா்கள் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனா். இதே பகுதியில் உள்ள 50 ஆண்டுகள் பழைமையான ஓட்டு வீட்டில் ஜெகநாதனின் தாயாா் குடி இருந்து வருகிறாா்.
இவா்களது வீட்டின் பின்பக்கத்தில் உமா சங்கா் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.இதை விற்பனை செய்ய முயன்ாகவும்
அதனால் நிலத்தின் முன்பக்கத்தில் உள்ள வீட்டை காலி செய்யக் கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜெகநாதன் குடும்பத்தாருக்கும் உமாசங்கா் குடும்பத்தாருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் ஜெகநாதனின் தாயாா் கொடுமுடி அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில் உள்ள மகள் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றுவிட்டாா். இந்த நிலையில் இரவோடு இரவாக மா்ம நபா்கள் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டு வீட்டில் இருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருள்களையும் எடுத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடா்பாக உமாசங்கா், வினோத் ஆகிய இருவா் வீட்டை இடித்துவிட்டு நகை, பணம் உள்ளிட்ட பொருள்களையும் எடுத்துச் சென்ாக மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.