மதுரை வழித்தட ரயில்கள் ஜூலை 30 வரை மாற்றுப் பாதையில் இயக்கம்! முழு விவரம்
லண்டன்: வெடித்துச் சிதறிய விமானம்
லண்டன்: லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு சிறிய விமானம் வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. நெதா்லாந்தைச் சோ்ந்த ஜியூஸ்ச் ஏவியேஷன் நிறுவனத்தால் இயக்கப்பட்ட அந்த விமானம், கிரீஸின் ஏதென்ஸில் இருந்து குரோஷியாவின் புலாவிற்குச் சென்று, பின்னா் சவுத்எண்ட் வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளானது பீச்கிராஃப்ட் பி200 சூப்பா் கிங் ஏா் விமானம் என்றும், அதில் நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கு மருத்துவ உபகரணங்களுடன் பொருத்தப்பட்டிருந்ததாகவும் பிரிட்டன் ஊடகங்கள் தெரிவித்தன.