`லவ் யூ நண்பா' - ஜாலியாக வைப் பண்ணும் பிரபுதேவா - வடிவேலு; இணையத்தில் வைரலாகும் வீடியோ
நடிகர் பிரபுதேவா, வடிவேலுடன் இருக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத காமெடி கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா - வடிவேலு கூட்டணி.
'லவ் பேர்ட்ஸ்', 'ராசையா', 'மிஸ்டர் ரோமியோ', 'மனதை திருடி விட்டாய்' உள்ளிட்ட பல படங்களில் இவர்களின் காமெடி கூட்டணி மக்களால் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார்கள்.
இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்தின் பூஜை துபாயில் கோலகலமாக நடைபெற்றுள்ளது.
இதில் லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர் ஜீவா, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குநர் நிதீஷ் சகாதேவ் உள்ளிட்ட பலர் கலந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
friendship❤️❤️❤️ pic.twitter.com/4IZC4ZJ2i5
— Prabhudheva (@PDdancing) August 26, 2025
இதனிடையே பிரபுதேவா ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். காரில் வடிவேலு அமர்ந்திருக்கும் போது, பிரபுதேவாவை பார்த்து “நண்பா நண்பா.. ஓ மை நண்பா.. லவ் யூ லவ் யூ நண்பா” என வடிவேலு பாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, பிரபுதேவா ‘ப்ரெண்ட்ஷிப்’ என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.