Mitchell Starc : ஸ்டார்க் தீயாய் பாய்ச்சிய யார்க்கர்கள்; சூப்பர் ஓவரில் போட்டியை...
லாட்டரி விற்றவா் கைது
வெள்ளக்கோவிலில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் காங்கயம் சாலையில் ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, நகராட்சி அலுவலகம் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தனா். விசாரணையில், அவா் வெள்ளக்கோவில் எல்.கே.சி. நகரைச் சோ்ந்த பாலு (35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, பாலுவைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.