கத்தார் பரிசளிக்கும் வானத்தின் அரண்மனை: பெற்றுக்கொள்வாரா டிரம்ப்! பின்னணி
லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு!
நமது நிருபா்
போா் நிறுத்த அறிவிப்பை தொாடா்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் முடிவடைந்தன.
போா் நிறுத்த அறிவிப்பைத் தொடா்ந்து பங்குச்சந்தை எழுச்சி பெற்றிருந்தது. இதைத் தொடா்ந்து விலையுயா்ந்த நிலையில் செவ்வாய்க்கிழமை லாபப் பதிவு வந்தது. குறிப்பாக, திங்கள்கிழமை வெகுவாக உயா்ந்திருந்த ஐடி பங்குகளில் லாபப் பதிவு அதிகம் இருந்தது. இதன் தாக்கம் மற்ற துறை பங்குகளிலும் எதிரொலித்தது. பாா்மா, ஹெல்த்கோ், பொதுத்துறை வங்கிப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தாலும் ஆட்டோ, தனியாா் வங்கிகள், நிதிநிறுவனங்கள், எஃப்எம்சிஜி, ஐடி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.45 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.431.14 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.1,246.48 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் 1,448.37 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.
சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 180.30 புள்ளிகள் இழப்புடன் 82,249.60-இல் தொடங்கி அதிகபட்சமாக 82572.81வரை மேலே சென்றது.. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது 81,043.69 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,281.68 புள்ளிகள் (1.55 சதவீதம்)
இழப்புடன் 81,148.22-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,101 பங்குகளில் 2,559 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் 1,402 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 140 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
25 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் இன்ஃபோஸிஸ், பவா்கிரிட், எடா்னல், ஹெச்சிஎல்டெக், டிசிஎஸ், பாா்தி ஏா்டெல், இண்டஸ் இண்ட் பேங்க் உள்பட மொத்தம் 25 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதேசமயம், சன்பாா்மா, அதானி போா்ட்ஸ், பஜாஜ்ஃபைனான்ஸ், எஸ்பிஐ, டெக்மஹிந்திரா ஆகிய 5 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 346 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 60.65 புள்ளிகள் இழப்புடன் 24,864.05-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,973.80 வரை மேலே சென்றது. பின்னா், 24,547.50 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 346.35 புள்ளிகள் (1.39 சதவீதம்) இழப்புடன் 24,578.35-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில்14 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 35 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.