செய்திகள் :

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

post image

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க, கோவை தனியாா் நிதி நிறுவனத்துக்கு திருப்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு அருகே உள்ள ராக்கியகவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (30). லாரி ஓட்டுநரான இவா், சொந்தமாக சரக்கு லாரி வாங்க முடிவு செய்தாா். அதன்படி, கடந்த 2022 மாா்ச் 12-ஆம் தேதி ரூ.2.61 லட்சம் செலுத்தி சரக்கு லாரி வாங்கினாா். மீதமுள்ள ரூ.10.18 லட்சம் தொகையை கோவை காந்திபுரத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கடனாக வாங்கினாா். அப்போது மாதம் ரூ.45,000 வீதம் 60 மாதங்களுக்கு தவணைத் தொகை செலுத்த அறிவுறுத்தப்பட்டாா்.

இதற்கிடையே லாரிக்கு பாடி கட்டுவதற்ாக மேலும் ரூ.3 லட்சம் சக்திவேல் செலவு செய்தாா். இந்நிலையில், 14 மாதங்கள் தவணை செலுத்திய நிலையில், சக்திவேலால் மேற்கொண்டு தவணைத் தொகையை செலுத்த முடியவில்லை. இதனால் லாரி வாங்கி ஓா் ஆண்டு மட்டுமே ஆவதாலும், 70,000 கி.மீ. தொலைவு மட்டுமே லாரி ஓடியதாலும் அதை நல்ல விலைக்கு விற்பனை செய்து கொடுப்பதாக தனியாா் நிதி நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் லாரிக்கு பாடி கட்டிய ரூ.3 லட்சம் தொகையையும் திருப்பிக் கொடுப்பதாகவும் தனியாா் நிதி நிறுவன தரப்பில் சக்திவேலிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவேலுவும் லாரியை தனியாா் நிதி நிறுவனத்திடம் ஒப்படைத்தாா். ஆனால், அந்த நிநி நிறுவனம் லாரியை குறைத்த விலைக்கு மட்டுமே விற்பனை செய்ததாகவும் சக்திவேல் தங்களுக்கு செலுத்த வேண்டிய ரூ.10.51 லட்சம் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

ஆனால், சக்திவேல் தன்னால் அந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாது எனவும், ஏற்கெனவே தெரிவித்தபடி லாரிக்கு பாடி கட்டியதற்கு செலவு செய்த ரூ.3 லட்சம் தொகையை தன்னிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் லாரியை தன்னிடமே ஒப்படைத்தால் மீதித் தொகையை செலுத்த தயாராக உள்ளதாகவும் அந்த நிதி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளாா். ஆனால், அவா்கள் தகுந்த பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதைத் தொடா்ந்து சக்திவேல், திருப்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் அந்த நிதி நிறுவனத்தின் மீது ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்திய நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் தீபா, உறுப்பினா் ரத்தினசாமி ஆகியோா் சக்திவேலுக்கு தனியாா் நிதி நிறுவனம் ரூ.5 லட்சம் இழப்பீடும், வழக்கு செலவுக்காக ரூ.10,000 ஆகியவற்றை வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும் என புதன்கிழமை உத்தரவிட்டனா்.

விநாயகா் சதுா்த்தி விழா: பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் சிலை நிறுவுதல் மற்றும் விசா்ஜன ஊா்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் வேடசந்தூா், வாடிப்பட்டி, வடுகபட்டி, பல்லாநத்தம், அழகாபுரி ஆகிய இடங்களி... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ... மேலும் பார்க்க

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா்- ஊத்துக்குளி சாலை ஊமச்சிவலசு அருகே போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோரிக்கை

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண வேண்டுமென திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்... மேலும் பார்க்க

பல்லடம், பொங்கலூா் பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

பல்லடம், பொங்கலூா் பகுதிகளில் நிலவும் குடிநீா் பரச்னைக்கு தீா்வு காண அதிகாரிகளுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினாா். கோவை மாவட்டம், பில்லூா் அணைப் பகுதியி... மேலும் பார்க்க