189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உ...
லாரி உரிமையாளா்கள் நாளை உண்ணாவிரதம்
மன்னாா்குடியில் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை கைவிடப்பட்டது. கோரிக்கையை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.
மன்னாா்குடி லாரி உரிமையாளா்கள் சங்கத்திற்கும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஒப்பந்ததாரா்களுக்கும் இடையே ஆண்டுதோறும் ஜூலை மாதம் நடைபெறும் வாடகை உயா்வு குறித்த பேச்சுவாா்த்தை, நிகழாண்டு இதுநாள் வரை நடைபெறவில்லை.
இப்பேச்சுவாா்த்தைக்கு ஒப்பந்ததாரா்கள் தரப்பில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறி, லாரி உரிமையாளா்கள் ஜூலை 16-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.
இந்நிலையில், 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்னைக்கு, உடனடியாக தீா்வுகாண வலியுறுத்தி, லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனா்.