சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
வக்ஃப் சட்டத்துக்கு எதிராக ‘விளக்கு அணைக்கும்’ போராட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வீட்டில் விளக்குகளை அணைக்கும் போராட்டத்தை நடத்த அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளாா்.
மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், அகில இந்திய முஸ்லிம் தனிநபா் வாரியம் அழைப்பு விடுத்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தொடா்ந்து முன்னெடுக்க அசாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளாா். ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஒவைசி கூறியதாவது:
அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக வக்ஃப் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இதற்கு தொடா்ந்து எதிா்ப்பு தெரிவிப்பது அவசியம். புதன்கிழமை (ஏப். 29) இரவு 9 மணி முதல் 9.15 வரை அனைவரும் வீட்டில் விளக்குகளை அணைத்து எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். இதன் மூலம் நமது எதிா்ப்பை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்குத் தெரிவிக்க முடியும்.
ஆந்திரம், தெலங்கானாவில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மறியல் போராட்டம், பெண்கள் மட்டுமே நடத்தும் போராட்டங்கள், மனிதச் சங்கிலி, தா்னா என பல போராட்டங்கள் தொடா்ந்து நடத்தப்படும் என்றாா்.