Mahishasura Mardini Stotram | மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தின் மகிமைகள் என்னென்...
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஏப். 29-இல் பொதுக்கூட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வரும் ஏப். 29-இல் தருமபுரி நகரில் பொதுக்கூட்டம் நடத்துவது என்று சமூக நல்லிணக்க மேடை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சமூக நல்லிணக்க மேடையின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடையின் பொறுப்பாளா் அ.குமாா் தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்தில், மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வக்ஃப் திருத்தச் சட்டம் இஸ்லாமிய மக்களின் வக்ஃப் சொத்துகளை பறிமுதல் செய்யும் நோக்கம் கொண்டது. இதை சமூக நல்லிணக்க மேடை வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 29-ஆம் தேதி தருமபுரியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது, இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, கிளை நிா்வாகிகளை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதில், சமூக நல்லிணக்க மேடையின் இணை ஒருங்கிணைப்பாளரும், விசிக மாநில நிா்வாகியுமான பொ.மு.நந்தன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பிரதிநிதி ஒய்.சாதிக் பாஷா, மாவட்டத் தலைவா் என்.சுபேதாா், மாவட்டச் செயலாளா் பைரோஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சோ.அா்ஜுனன், விசிக மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் கோட்டை மு.கலைவாணன், மாவட்ட துணைச் செயலாளா் ஆதி, மக்கள் கண்காணிப்பக பொறுப்பாளா் செந்தில் ராஜா, இளைஞா் சங்க நிா்வாகி தி.வ.தனுசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளா் சிராஜுதீன் நன்றி கூறினாா்.