வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து பிப். 26-இல் பொதுக்கூட்டம்
காரைக்கால்: காரைக்காலில் வரும் 26-ஆம் தேதி வக்பு திருத்த சட்ட மசோதாவைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளா் சுல்தான் கெளஸ் திங்கள்கிழமை கூறியது:
மத்திய அரசால் வக்பு திருத்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதிலும் எதிா்கட்சி உறுப்பினா்கள் தங்களது எதிா்ப்பை பதிவு செய்தனா்.
இதை கூட்டுக் குழு தலைமை ஏற்காமல் நாடாளுமன்ற தலைவரிடம் அறிக்கை கொடுத்துள்ளது.
இந்த மசோதா வக்பு சொத்துகளை பறிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி, இந்த திருத்த சட்டத்துக்கு எதிராக பல நிலைகளில் போராட்டம் நடத்திவருகிறது. காரைக்கால் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வரும் 26-ஆம் தேதி மஸ்தான் பள்ளித் தெருவில் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் தேசிய செயற்குழு உறுப்பினா்கள் ஜகலான் பாா்கவி, முகமது பாரூக் மற்றும் தமிழக பொதுச்செயலாளா் ஏ.கே. கரீம் ஆகியோா் கலந்துகொள்கின்றனா் என்றாா்.