செய்திகள் :

வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் சரிந்ததையடுத்து சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு!

post image

பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சற்று உயர்ந்த நிலையில், முதலீட்டாளர்கள் எஸ்பிஐ, எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ ஆகிய பங்குகளை விற்பனை செய்ததால் தனது நீண்ட நாள் எழுச்சி பேரணியை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முடித்து கொண்டு சரிந்து முடிந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 150.68 புள்ளிகள் உயர்ந்து 78,167.87 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 67.85 புள்ளிகள் உயர்ந்து 23,736.50 புள்ளிகளாக இருந்தது. பிறகு சென்செக்ஸ் 73.05 புள்ளிகள் குறைந்து 77,928.26 புள்ளிகளாகவும், நிஃப்டி 37.55 புள்ளிகள் குறைந்து 23,631.10 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 728.69 புள்ளிகள் குறைந்து 77,288.50 புள்ளிகளாகவும், நிஃப்டி 181.80 புள்ளிகள் குறைந்து 23,486.85 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

இன்று மும்பை பங்குச் சந்தையில் 808 பங்குகள் உயர்ந்தும் 2,799 பங்குகள் சரிந்தும் 78 பங்குகள் விலை மாற்றமின்றி முடிந்தது.

உயர்ந்து வரும் இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் விற்பனையில் தளர்வு ஆகிய பல நேர்மறையான விஷயங்கள் சந்தைகள் உள்வாங்கியுள்ள நிலையிலும், கட்டணங்கள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை முதலீட்டாளர்களை விளிம்பில் வைத்திருக்கும் நிலையில் அவை இந்திய பொருளாதாரத்தை கணிசமாக சீர்குலைப்பதாக இல்லை.

சீமென்ஸ் நிறுவனத்தின் பிரிவினை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அங்கீகரித்ததாக நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அதன் பங்குகள் 7 சதவிகிதம் உயர்ந்து முடிந்தது.

சீமென்ஸ் எனர்ஜி இந்தியா லிமிடெட் தனி ஒரு நிறுவனமாக செயல்பட இது வழி வகுக்கும் நிலையில், மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, சீமென்ஸ் பங்குதாரர்கள் ஏப்ரல் 7, 2025 அன்று நிர்ணயிக்கப்பட்ட பதிவு தேதியின்படி, அவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு சீமென்ஸ் லிமிடெட் பங்கிற்கும் சீமென்ஸ் எனர்ஜி இந்தியாவின் ஒரு பங்கைப் பெறுவர்.

உணவு டெலிவரி நிறுவனங்களான சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி பேங்க் ஆஃப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் அறிக்கையைத் தொடர்ந்து 4 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தது.

நிஃப்டியில் டிரெண்ட், இண்டஸ்இண்ட் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், கிராசிம் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய பங்குகள் உயர்ந்தும் என்டிபிசி, டெக் மஹிந்திரா, பிபிசிஎல், சிப்லா மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சொமேட்டோ, என்டிபிசி, டெக் மஹிந்திரா, மாருதி, பஜாஜ் பைனான்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, சன் பார்மா, ஆக்ஸிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தது.

ஆசிய சந்தைகளில் இன்று சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை உயர்ந்த முடிந்தது.

அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தது.

இதையும் படிக்க: வாகனங்களின் விலையை உயா்த்தும் மஹிந்திரா

தமிழ்நாட்டில் அதிவேக டேட்டாவை வழங்குகிறது ஜியோ! காரணம் என்ன?

மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் அதிவேக இணைய சேவையை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இதற்குக் காரணம், ஜியோ நிறுவனம் தனது அலைதிறனை மேம்படுத்தியதுதான் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது, 5ஜி இணைய ... மேலும் பார்க்க

ஐபிஎல் ரசிகர்களுக்காக... இன்றுடன் முடிகிறது ஜியோ வழங்கிய சலுகை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்களுக்காக ஜியோ நிறுவனம் வழங்கிய சலுகை இன்றுடன் (மார்ச் 31) நிறைவு பெறவுள்ளது. மேலும் பார்க்க

ஆர்டிஃபெக்ஸ் நிறுவனத்தின் 80% பங்குகளை கையகப்படுத்தும் டாடா ஆட்டோகாம்ப்!

புதுதில்லி: ஜாகுவார் லேண்ட் ரோவர் குழுமத்தின் அங்கமான ஆர்டிஃபெக்ஸ் இன்டீரியர் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 80% பங்குகளை வெளியிடப்படாத தொகைக்கு கையகப்படுத்த போவதாக டாடா ஆட்டோகாம்ப் இன்று தெரிவித்தது... மேலும் பார்க்க

நிகழாண்டில் 46 கிளைகளைத் திறந்த கரூர் வைஸ்யா வங்கி!

சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி 2024-25 ஆம் நிதியாண்டில் இது வரை 46 கிளைகளை நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளது.சமீபத்தில் கும்பகோணம், விசாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆலப்... மேலும் பார்க்க

ரூ.700 கோடியில் படைகள் போக்குவரத்து வாகனங்கள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

இந்திய பாதுகாப்புப் படைகள் போக்குவரத்துக்கான வாகனங்களை வழங்க பாதுகாப்புத் துறையுடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கரூா் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது. இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க