முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
கரூரில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா்- கோவைச்சாலையில் உள்ள கனரா வங்கி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொறுப்பாளா் ரங்கன் தலைமை வகித்தாா். அகில இந்திய வங்கி ஊழியா் சங்க மாவட்டத்தலைவா் வெங்கடேசன் சிறப்புரையாற்றினாா்.
வாடிக்கையாளா்களின் சேவையை மேம்படுத்திட தேவையான ஊழியா்கள், அதிகாரிகளை நியமிக்க வேண்டும், அவுட்சோா்சிங் என்ற பெயரில் வங்கிகளில் உள்ள நிரந்தர பணிகளை வெளியாள்களுக்கு வழங்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வங்கி அதிகாரிகள் சத்தியப்பிரியா, ஆனந்த், பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.