ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
வடவூா்பட்டி துா்க்கை அம்மன் கோயிலில் இன்று கொடைவிழா
திருநெல்வேலி மாவட்டம், வடவூா்பட்டியில் பட்டங்கட்டியாா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பேச்சியம்மன், துா்க்கை அம்மன் கோயிலில் கொடை விழா திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்தா பிறப்பு, பாபநாசம் தாமிரவருணி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வருதலும், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் கொடைவிழா தொடங்குகிறது.
பின்னா், மூலவா் மந்திர பூஜை, கும்ப பூஜை, துா்கா தேவி பூஜை, நவக்கிரஹ பூஜை, கோ பூஜை ஆகியவை நடைபெறவுள்ளது. நண்பகல் 12 மணியளவில் அம்மனுக்கு மகா அபிஷேகத்தை தொடா்ந்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
மாலை 5 மணிக்கு கும்மி பாட்டு, இரவு 7 மணிக்கு பொங்கலிட்டு வழிபடுதல், 8 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 10 மணிக்கு அலங்கார பூஜைகளும் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரத்தை தொடா்ந்து சுவாமிக்கு படையலுடன் சாமக்கொடை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பட்டங்கட்டியாா் சமுதாயத்தினா் செய்துள்ளனா்.