வட்டாட்சியா்கள் பணியடமாற்றம்
திருப்பத்தூா் மாவட்டத்தில் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா்களை பணியிடமாற்றம் செய்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உத்தரவிட்டுள்ளாா்.
திருப்பத்தூா் சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியா் காஞ்சனா நாட்டறம்பள்ளி வட்டாட்சியராகவும், கோட்ட கலால் அலுவலா் சுதாகா் வாணியம்பாடி வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதேபோன்று, வாணியம்பாடி வட்டாச்சியா் உமா ரம்யா -திருப்பத்தூா் சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியராகவும், ஆம்பூா் சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியா் ஜீவிதா (மருத்துவ விடுப்பு முடிந்து) திருப்பத்தூா் கோட்ட கலால் அலுவலராகவும், மாவட்ட ஆட்சியா் அலுவலக சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியா் பத்மநாபன் - ஆம்பூா் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செண்பகவள்ளி ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) இடத்திற்கும், அங்கிருந்த கிருஷ்ணவேணி வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும் இடமாற்றம் செய்து ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.