செய்திகள் :

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

post image

வட கொரியா வியாழக்கிழமை பல்வேறு வகையான குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென் கொரிய முப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வட கொரியாவின் கிழக்கு துறைமுக நகரமான வோன்சன் பகுதியிலிருந்து வியாழக்கிழமை காலை 8.10 முதல் 9.20 மணி வரை பல ஏவுகணைகள் ஏவி சோதிக்கப்பட்டன. இந்த ஏவுகணைகளில் ஒன்று அதிகபட்சமாக 800 கி.மீ. தொலைவு பாய்ந்து கடலில் விழுந்தது.

இந்தச் சோதனைகளுக்கும், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு வட கொரியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கும் தொடா்பு இருக்கிா என்று ஆய்வு செய்யப்படுகிறது. ரஷியாவின் இஸ்காண்டா் ஏவுகணையை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளின் செயல்திறனைச் சோதிக்க இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாா்ச் 10-ஆம் தேதிக்குப் பிறகு ஏவுகணை சோதனையில் வட கொரியா ஈடுபட்டுள்ளது இதுவே முதல்முறை. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ஆறு முறை வட கொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.

’எதிரிகளால் பேரிழப்பு’: உலக வங்கியிடம் கூடுதல் கடன் கோரிய பாகிஸ்தான்!

உலக வங்கியிடம் பாகிஸ்தான் அரசு கூடுதல் கடன் கோரியுள்ளது.ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 ராணுவத் தளங்களைக் குறிவைத... மேலும் பார்க்க

இந்திய ‘ட்ரோன்’ தாக்குதல் லாகூரில் 4 வீரா்கள் காயம்: பாகிஸ்தான் தகவல்

லாகூரில் இந்தியா நடத்திய ‘ட்ரோன்’ (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) தாக்குதலில் 4 ராணுவ வீரா்கள் காயமடைந்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்தியா ஏவிய அனைத்து டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும் அறிவிக... மேலும் பார்க்க

சொந்த போா் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா

இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ன் நினைவு தினத்தை முன்னிட்டு ரஷியா தாமாக முன்வந்து அறிவித்த போா் நிறுத்தத்தையே அது 734 முறை மீறியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் உக்ரைன்... மேலும் பார்க்க

கனிம ஒப்பந்தம்: உறுதி செய்தது நாடாளுமன்றம்

உக்ரைனின் கனிம வங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்காக அந்த நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு உக்ரைன் நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.உக்ரைன் மீது ரஷியா க... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் அதைத் தொடா்ந்து இருநாட்டு எல்லையில் நிலவும் மோதல் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விவ... மேலும் பார்க்க

இஸ்தான்புல் மேயரின் எக்ஸ் கணக்கு முடக்கம்

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துருக்கியின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரும் அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோக்லுவின் எக்ஸ் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க