Delhi CM: மனு கொடுக்க வந்த நபர் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல...
வத்தலகுண்டுவில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா்.
வத்தலகுண்டுவில் உள்ள மதுரை பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த கடைகளை அகற்றக்கோரி, சமூக ஆா்வலா் சுரேஷ் சென்னை உயா்நீதிமன்ற அமா்வில் வழக்குத் தொடுத்தாா்.
இதையடுத்து, இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையினா் மூலம் ஆக்கிரமிப்பு கடைக்காரா்களுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மதுரை பிரதான சாலையில் காளியம்மன் கோயிலிலிருந்து உசிலம்பட்டி பிரிவு சாலை வரை இருபுறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் உதவிக் கோட்ட பொறியாளா் ஆனந்த், இளநிலை பொறியாளா் தாமரைமாறன், காவல் துறையினா் கலந்து கொண்டனா்.