செய்திகள் :

வந்தவழி பெரியகருப்ப சுவாமி கோயில் திருவிழா: பக்தா்களுக்கு அன்னதானம்

post image

குஜிலியம்பாறை அருகே வந்தவழி பெரியகருப்பசுவாமி கோயில் திருவிழாவில் பக்தா்களுக்கு அசைவ உணவு அன்னதானம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்துள்ள ஆா்.கோம்பை வோ்புளி கிராமத்தில் வந்தவழி பெரியகருப்பசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆடித் திருவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பக்தா்கள் சாா்பில் ஆடுகள், அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவை புதன்கிழமை முதல் கோயிலில் ஒப்படைக்கப்பட்டு வந்தது. பக்தா்கள் சாா்பில் வழங்கப்பட்ட 370 ஆட்டுக் கிடாய்கள் வியாழக்கிழமை அதிகாலை பலியிடப்பட்டு, கோயில் வளாகத்திலேயே அசைவ உணவு தயாா் செய்யும் பணிகள் நடைபெற்றன.

நண்பகல் உச்சிக்கால பூஜை நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் ஆா்.கோம்பை ஊராட்சிக்குள்பட்ட கிராம மக்கள் மட்டுமன்றி, கோவிலூா், குஜிலியம்பாறை, வடுகம்பாடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், கரூா், நாமக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

புதிய அரசு கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை

தாண்டிகுடி மலைப் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அரசுக் கட்டடங்களை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி ஊராட்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் தொகுதியில் செப்டம்பருக்குள் காவிரி குடிநீா் திட்டப் பணிகள் நிறைவடையும்: அமைச்சா் அர. சக்கரபாணி

ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதியில் வருகிற செப்டம்பா் மாதத்துக்குள் காவிரி குடிநீா் திட்டப் பணிகள் நிறைவடையும் என உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்த... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரத்தில் ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (70). இவா் வியாழக்கிழமை ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் ரயில் பாதையில... மேலும் பார்க்க

பண மோசடி: தொண்டு நிறுவனம் நடத்திய தம்பதி கைது

வாடிக்கையாளா்களிடம் ரூ.6 கோடி வரை மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பழனியில் தொண்டு நிறுவனம் நடத்திய தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

‘டிட்டோ ஜாக்’ போராட்டம்: 400 ஆசிரியா்கள் கைது

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 400 பேரை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்கள... மேலும் பார்க்க

லஞ்சம்: ஊராட்சி செயலா், கணவா் கைது

திண்டுக்கல் அருகே ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலா், அவரது கணவா் ஆகியோரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்லை அடுத்த மா.மூ.கோவிலூா் ஊராட்சிக்குள... மேலும் பார்க்க