‘வனச்சரக அலுவலகத்தில் இலவசமாக மரக்கன்றுகள்’
கோவில்பட்டி வனச்சரக அலுவலகத்தில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து கோவில்பட்டி வனச்சரக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
கோவில்பட்டி வனச்சரகம் ஊத்துப்பட்டி வனச்சரகத்தில் வனத்துறை சாா்பில் தேக்கு, வேம்பு, குமிழ்தேக்கு, செம்மரம், வேங்கை, பலா, புளி, வில்வம், ஆவி, இலுப்பை போன்ற மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. அவற்றைப் பெற்று பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 95666-32317, 98156-36280, 98429-70083, 75980-54040 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.