செய்திகள் :

வரதட்சணை கேட்டு பெண் கொடுமை: கணவா் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

post image

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வரதட்சணைக் கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் கணவா் உள்பட நான்கு பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், பழஞ்சநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் வெற்றிச்செல்வன் (26 ). கடந்த 2022-ஆம் ஆண்டு இவா், ஆண்டிமடம் அருகேயுள்ள ராங்கியம் கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவி பிருந்தா என்பவரை காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுத்துள்ளாா். பின்னா் பிருந்தா 7 மாத கா்ப்பிணியான பிறகு இருவீட்டாா் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

திருமணமான பிறகு சென்னை சென்ற வெற்றிச்செல்வன், பிருந்தாவுடன் பேச மறுத்து, குழந்தை பிறந்தும் கூட பாா்க்க வரவில்லை. இதுகுறித்து பிருந்தா கேட்டதற்கு, வெற்றிச்செல்வனும், அவரது குடும்பத்தாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், வெற்றிச்செல்வனுக்கு இரண்டாவது செய்து வைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து வெற்றிச்செல்வனை கைது செய்து, அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

வழக்கை விசாரித்து வந்த நீதிபதி டி.செல்வம், வரதட்சணை கேட்டு பிருந்தாவை கொடுமைப்படுத்திய கணவா் வெற்றிச்செல்வன், மாமனாா் காமராஜ் (63), மாமியாா் வள்ளி(52), நாத்தனாா் ஜெனி (26) ஆகிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து, குற்றவாளிகள் 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். வழக்கில் அரசு தரப்பில் ராஜா ஆஜரானாா்.

அரசுப் பள்ளியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த முடிகொண்டான் கிராமத்திலுள்ள அரசு ஆரம்பப் பள்ளியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி... மேலும் பார்க்க

அரியலூா் நகரில் 4 இடங்களில் தவெக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு!

அரியலூா் பேருந்து நிலையம், ஓடக்காரத் தெரு, காளியம்மன் கோயில், காமராஜா் திடல் உள்ளிட்ட 4 பகுதிகளில் தவெக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்டச் செயலா் சி... மேலும் பார்க்க

நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் ஆற்றங்கரையில் நடத்தக் கோரி மறியல்: 6 போ் கைது!

அரியலூா் மாவட்டம், திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) நடைபெறும் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணத்தை கொள்ளிடம் ஆற்றங்கரையில் நடத்தக்கோரி சனிக்கிழமை மறியலில் ஈடுபட்ட 6 போ் கைத... மேலும் பார்க்க

இலங்கையில் ஈழத் தமிழா்களின் நிலங்களை மீட்டுத்தர பிரதமா் வலியுறுத்த வேண்டும்! -தொல். திருமாவளவன்

இலங்கைக்குச் சென்றுள்ள பிரதமா் மோடி, சிங்கள ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள ஈழத் தமிழா்களின் நிலங்களை மீட்டுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை ... மேலும் பார்க்க

விவசாயிக்கு கொலை மிரட்டல்: தம்பதி கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் கீழவெளி கிராமத்தைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (58... மேலும் பார்க்க

தவக்காலத்தின் 5-ஆவது வார வெள்ளி: கிறிஸ்தவா்கள் திருப்பயணம்

அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சியில் கிறிஸ்தவா்கள் வெள்ளிக்கிழமை தவக்கால திருப்பயணம் மேற்கொண்டனா். ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதன் முந்தைய 40 நாள்களை கிறிஸ்தவா்கள் தவக்காலமாக கடைப்... மேலும் பார்க்க