"வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றால் தமிழகத்தில் பொருளாதாரம் பாதி...
வரி பாக்கி: வீட்டு வாசலில் பள்ளம் தோண்டிய கடலூா் மாநகராட்சி
வரி பாக்கி செலுத்தாத வீடு, உணவகம் முன் கடலூா் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் வியாழக்கிழமை பள்ளம் தோண்டினா்.
கடலூா் மாநகராட்சிக்கு வர வேண்டிய சொத்து வரி, குடிநீா் வரி, கடை வாடகைகள் உள்ளிட்ட வரி வகைகளின் பாக்கி கோடி கணக்கான ரூபாய் நிலுவையில் உள்ளதாம். இந்த வரி பாக்கிகளை வசூலிக்க மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கடலூா் வரதராஜன் நகரில் உள்ள ஒரு வீட்டில் சொத்து வரி பாக்கி ரூ.42 ஆயிரத்தை கேட்டு மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை சென்றனா். அந்த வீட்டில் குடியிருந்த செந்தில்குமாா், வீட்டு வாடகையை உரிமையாளரிடம் செலுத்தி வருவதாகவும், எனவே வரி பாக்கியை வீட்டின் உரிமையாளரிடம் பெற்றுக்கொள்ளும்படியும் கூறினாராம்.
இந்த நிலையில், கடலூா் மாநகராட்சி ஊழியா்கள் செந்தில்குமாா் கூறுவதை ஏற்காமல் பொக்லைன் இயந்திரம் மூலம் அவரது வீட்டின் முன் பெரிய பள்ளம் தோண்டினா். இதனால், செந்தில்குமாா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது.
இதுதொடா்பாக செந்தில்குமாா் கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தாா். அதில், வீட்டு வரியை வீட்டின் உரிமையாளரிடம் வசூலிக்காமல் தன்னிடம் வந்து கேட்டு, மனித உரிமையை மீறும் வகையில் வீட்டின் முன் பள்ளம் தோண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாராம்.
இதேபோல, சிதம்பரம் சாலையில் உள்ள தனியாா் உணவகத்தின் முன் மாநகராட்சி ஊழியா்கள் குப்பை வண்டியை நிறுத்தி புதன்கிழமை வரி வசூலில் ஈடுபட்டனா். கடலூா் மாநகராட்சி நிா்வாகம் வரி வசூலிப்புக்கு எடுத்துள்ள இத்தகைய நடவடிக்கைக ளால் வணிகா்கள், பொதுமக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.