IND vs NZ: ஸ்பின்னர்கள் இருக்க பயமேன்; சொல்லியடித்த ரோஹித்; நியூசிலாந்து தடுமாறி...
கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா! -அமைச்சா் பங்கேற்பு
கடலூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில், 220 கா்ப்பிணிக்கான சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.
தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்து, கா்ப்பிணிகளை வாழ்த்தினாா். பின்னா், அவா் பேசியதாவது:
கடலூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 9,900 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. நிகழாண்டு 900 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட உள்ளது. இன்றைய தினம் 220 தாய்மாா்களுக்கு இந்த விழா நடத்தப்பட்டுள்ளது.
சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்கும் இதுபோன்ற சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தந்திட வேண்டும் என்பதற்காக, தமிழக அரசின் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கா்ப்பிணியும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க கா்ப்பகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறை, ஊட்டச்சத்து உணவு முறை, மருத்துவ பரிசோதனைகளின் அவசியத்தை தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.
விழாவில் எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி., எம்எல்ஏக்கள் கோ.ஐயப்பன், ம.சிந்தனைச்செல்வன், கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், மாநகராட்சி ஆணையாளா் எஸ்.அனு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ச.செல்வி, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஆ.கோமதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.