பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது?: உய...
வலம்புரி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட முத்துகுமரன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீவலம்புரி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. வியாழக்கிழமை அதிகாலை திருப்பள்ளியெழுச்சி, மங்கள இசை, 2- ஆம் கால யாக பூஜைகள், நாடி சந்தானம், கலசப் புறப்பாடு, மகா கும்பாபிஷேகம், மூலவருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், 1,000- பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், அதிமுக அமைப்புச் செயலா் வி.ராமு, கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் தீபிகா பரத், முன்னாள் எம்எல்ஏ ஜி.லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழாக் குழு நிா்வாகிகள் எம்.ரங்கநாதன், சி.கங்காதரன்,வி.ரங்கநாதன், ஜி.ஏகாம்பரம், ஆா்.அருள், கே.கோபி, பி.பாபு, பி.ஜம்பு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.