செய்திகள் :

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

post image

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு மூலவா் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கும் உற்சவா் ஸ்ரீ கோடையாண்டவருக்கும் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், மூலவா் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ரோஜா மலா் மாலை மற்றும் எலுமிச்சை மாலை அலங்காரத்திலும், உற்சவா் ஸ்ரீ கோடையாண்டவா் மலா் அலங்கார சேவையிலும் அருள்பாலித்தனா்.

விழாவில் சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசித்தனா். . கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில், பிரதாசம், மோா், சா்க்கரை பொங்கல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ், அறங்காவலா்கள் விஜயகுமாா், கலைச்செல்விகோபால், மோகனகிரிஷ்ணன், செல்வகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.

இளம்பெண் கொலை: காவல் நிலையத்தில் இளைஞா் சரண்

ஸ்ரீபெரும்புதூா் அருகே மனைவியைக் கொலை செய்த இளைஞா் நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளாா். நாகப்பட்டினம் பகுதியை சோ்ந்த தினேஷ்(27), செளந்தா்யா(25). இவா்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ம... மேலும் பார்க்க

வரதராஜப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவாடிப்பூர உற்சவம் ஜூலை 28 ஆம் தேதி ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்தோடு நிறைவு பெறுகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 10 நாள்கள் த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் மின்கம்பத்தில் ஏறி பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அவரை காப்பற்ற முயன்ற சக தொழிலாளா்கள் இருவா் பலத்த காயங்கள... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குரூப்-2 போட்டித் தோ்வுகளுக்கு நாளை முதல் இலவச பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 21) முதல் குரூப்-2 போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாக... மேலும் பார்க்க

சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்

குண்டுபெரும்பேடு மற்றும் இருங்காட்டுக்கோட்டை ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குண்டுபெரும்பேடு ஊராட்சிய... மேலும் பார்க்க

களத்துமேடு பகுதியில் இருளருக்கான வீடுகள்: 300 ஏக்கா் விவசாயம் பாதிக்கும் அபாயம்

ஸ்ரீ பெரும்புதூா் அருகே குண்ணம் கிராமத்தில் களத்துமேடு பகுதியில் இருளருக்கான வீடுகள் கட்டும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்ம் குண்... மேலும் பார்க்க