செய்திகள் :

வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகள் விருதுக்கான போட்டியாளர்களை அறிவித்த ஐசிசி!

post image

இந்த ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் விருதுக்கான போட்டியாளர்களை ஐசிசி இன்று (டிசம்பர் 28) வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளிலிருந்து வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகள் விருதுக்கான முதல் கட்ட போட்டியாளர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: சதம் விளாசிய நிதீஷ் ரெட்டிக்கு பரிசுத் தொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

வளர்ந்து வீரர்களுக்கான போட்டியில் இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்சன், பாகிஸ்தானின் சைம் ஆயுப், மேற்கிந்தியத் தீவுகளின் ஷமர் ஜோசப் மற்றும் இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வளர்ந்து வரும் வீராங்கனைகளுக்கான போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் அன்னேரி டெர்க்சென், ஸ்காட்லாந்தின் சசிகா ஹோர்லி, இந்தியாவின் ஸ்ரேயங்கா பாட்டீல், அயர்லாந்தின் ஃப்ரேயா சார்ஜண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வெற்றியாளர்கள் யார் என்பது அடுத்த ஆண்டு ஜனவரி இறுதியில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடனான டி20 கிரிக்கெட்: தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இத்துடன் 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்து தொடரைக் கைப்பற்றியுள்ளது அந்... மேலும் பார்க்க

கே.எல்.ராகுலுக்கு ஏன் நாட் அவுட் கொடுக்கவில்லை; முன்னாள் இந்திய கேப்டன் கேள்வி!

இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு சர்ச்சைக்குரிய முறையில் அவுட் கொடுக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு கடைசி நாளி... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா, விராட் கோலியின் பங்களிப்பு இல்லை; முன்னாள் கேப்டன் கடும் விமர்சனம்!

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் மூத்த வீரர்கள் அணிக்காக தங்களது பங்களிப்பை வழங்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு... மேலும் பார்க்க

ஜெய்ஸ்வால் அவுட் சர்ச்சை: இரு அணிகளின் கேப்டன்களும் பேசியது என்ன?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சர்ச்சைக்குரிய விதத்தில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தது குறித்து இரண்டு அணிகளின் கேப்டன்களும் பேசியுள்ளனர்.இந்... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் இதனை புரிந்துகொள்ள வேண்டும்; எதைக் கூறுகிறார் ரோஹித் சர்மா?

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட... மேலும் பார்க்க

இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலன இரண்டாவது டி20 போட்டி இன்று (டிசம்பர் 30) பே ஓவலில்... மேலும் பார்க்க