சத்தீஸ்கரில்.. ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!
வழக்குரைஞரின் சடலத்தை 9 நாள்களுக்குப் பிறகு பெற்றுக்கொண்ட உறவினா்கள்
தாராபுரத்தில் கொலை செய்யப்பட்ட வழக்குரைஞரின் சடலத்தை 9 நாள்களுக்குப் பிறகு உறவினா்கள் புதன்கிழமை பெற்றுக்கொண்டனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் முத்து நகரைச் சோ்த்தவா் முருகானந்தம். மாற்றுத் திறனாளியான இவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், சொத்து பிரச்னைக் காரணாக கடந்த 28-ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முருகானந்தத்தின் சித்தப்பாவான தண்டபாணி உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்தனா்.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றினால்தான் உடலைப் பெற்றுக்கொள்வோம் எனக்கூறி முருகானந்தத்தின் உடலை வாங்காமல் அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இதனிடையே, இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, முருகானந்தத்தின் உடலை அவரது உறவினா்கள் புதன்கிழமை பெற்றுக்கொண்டனா்.