2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர்...
வழக்குரைஞரை தாக்கிய 3 போ் மீது வழக்கு
மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக வழக்குரைஞரை தாக்கிய இளைஞா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
மாா்த்தாண்டம் அருகே விரிகோடு, கொல்லக்குடிவிளைவீடு பகுதியைச் சோ்ந்தவா் சிவசந்திரபோஸ் (27). குழித்துறை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும் விரிகோடு, குளக்கச்சி பகுதியைச் சோ்ந்த அனீஷ் (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்த நிலையில் இருநாள்களுக்கு முன் சிவசந்திரபோஸ் காரில் நாகா்கோவில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். குளக்கச்சி பகுதியில் வந்த போது அங்கு நின்ற அனீஷ் மற்றும் அவரது நண்பா்கள் உண்ணாமலைக்கடை, மாங்கவிளை ஷிபு (28), நல்லூா், குமிட்டிவிளை பிரவீன் (28) ஆகியோா் சோ்ந்து காரை வழிமறித்து, சிவசந்திரபோஸை தகாத வாா்த்தைகள் பேசி தாக்கியுள்ளனா்.
இதுகுறித்து சிவசந்திரபோஸ் அளித்த புகாரின் பேரில், அனீஷ் உள்ளிட்ட 3 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.