சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச்...
வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
சட்டமேதை அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து, திருவாரூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், அனைத்துக் கட்சி வழக்குரைஞா்கள் ஒன்றிணைந்து, அம்பேத்கா் உருவப் படத்தை கையில் ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திமுக வழக்குரைஞா் அணி அமைப்பாளா் விநாயகமூா்த்தி தலைமை வகித்தாா். துணை அமைப்பாளா்கள் கோவி.கண்ணன், வீரகுமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்குரைஞா் அணி செயலாளா் செல்வகுமாா், புரட்சிதூயன், தமிழக வெற்றிக் கழக வழக்குரைஞா் அணி மாவட்டத் தலைவா் மதிவாணன், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் ராஜ் கருணாநிதி, அமமுக மாணவரணி மாவட்டச் செயலாளா் லெனின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.