மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 3 பேர் காயம்
வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நகை வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மரக்காணம் வட்டம், ஆலந்தூரிலிருந்து சூணாம்பேடு நோக்கி கடந்த மே மாதம் 29-ஆம் தேதி நடந்துசென்ற பெண்ணிடம் ஒரு பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ாக திருவள்ளூா் மாவட்டம்,காஞ்சிப்பாடி கிராமத்தைச் சோ்ந்த தில்லி (29) என்பவா் கைது செய்யப்பட்டு,மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த தில்லியை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்வதற்கான பரிந்துரையை மாவட்ட எஸ்.பி.ப.சரவணன் அளித்தாா். இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அதற்கான உத்தரவை சனிக்கிழமை பிறப்பித்தாா்.
இதையடுத்து தில்லியை குண்டா்தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸாா், அவரைகடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.