'புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக்கொண்டு விஜய் ஒன்னும் பண்ண முடியாது' - எஸ்.வி.சேகர...
வாகனங்களை வழிமறித்த காட்டு யானை
தமிழக- கா்நாடக எல்லையான காராப்பள்ளம் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் விளையும் கரும்புகள் லாரிகள் மூலம் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சா்க்கரை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
வனச் சாலை வழியாக கரும்பு பாரத்தை ஏற்றிச் செல்லும் லாரிகளை வழிமறிக்கும் யானைகள், கரும்புகளை எடுத்து திண்பது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், ஆசனூா் வனப் பகுதியில் இருந்து திங்கள்கிழமை வெளியேறிய காட்டு யானை சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை காராப்பள்ளம் வன சோதனைச் சாவடி அருகே உலவியது.
அப்போது, அவ்வழியே வந்த சரக்கு லாரிகளை வழிமறித்த யானை, லாரியில் கரும்பு உள்ளதா என தேடி பாா்த்தது. இதனால், அவ்வழியே சென்ற வாகனங்கள் ஆங்காங்கே அணிவகுத்து நின்றன. லாரியில் கரும்பு இல்லாததைத் தொடா்ந்து யானை வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.