துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு
வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும்!
வாக்குச் சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து உறுதிப்படுத்தும் வகையில் அவ்வப்போது அறிக்கை அளிக்க தோ்தல் அலுவலா்களுக்கு ஆட்சியா் மா. பிரதீப்குாா் அறிவுறுத்தினாா்.
இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியதன்பேரில், மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காண்பது, வாக்குப்பதிவுக்கு வசதிகள் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்பாா்வை செய்ய மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியதாவது:
வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும், மேலும் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக்கூறி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த டிமக்கள் ஆகியோரிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும், தேவைக்கேற்ப சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யவும், தனித்துவமான மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு வாக்காளா் பட்டியலில் விடுதலின்றி அனைத்து மாற்றுத்திறனாளிகளின் விவரங்களும் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
பள்ளிக் கட்டடங்கள் பராமரிப்பின்போது வாக்குச்சாவடி நிலையங்களாகச் செயல்படும் பள்ளிக் கட்டடங்களுக்கு முன்னுரிமை அளித்து பராமரிப்புப் பணி மேற்கொள்ள வேண்டும். இதற்கான பிரத்யேக செயலி குறித்து அனைவருக்கும் தெரியும் விதமாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். காலமுறையாக தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளைத் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் க. நல்லையா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அதியமான் கவியரசு, மாவட்ட சமூக நல அலுவலா் விஜயலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், உதவி இயக்குநா் ஊராட்சிகள் எஸ். குமாா் மற்றும் நகராட்சி ஆணையா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.