செய்திகள் :

வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபாா்க்க கொள்கையை வகுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

post image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபாா்க்க கொள்கையை வகுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை, ஏற்கெனவே இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஏப்ரலில் விசாரணை நடத்தி தீா்ப்பளித்த நீதிபதிகள் அமா்விலேயே தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

ஹரியாணா மாநில முன்னாள் அமைச்சா் கரண் சிங் தலால், 5 முறை எம்எல்ஏ-வாக தோ்ந்தெடுக்கப்பட்ட லகான் குமாா் சிங்லா ஆகியோா் தரப்பில் இந்தப் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. ஹரியாணாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் இரண்டாம் இடம் பிடித்து தோல்வியைச் சந்தித்த இவா்கள் இருவரும், வாக்குப் பதிவில் சந்தேகங்களை எழுப்பியதோடு தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட், வாக்குப் பதிவு இயந்திரம், வாக்கு ஒப்புகைச் சீட்டு இந்தியரமான விவிபேட், சின்னங்களை பதிவேற்றும் பிரிவு மற்றும்

இயந்திரத்தின் எரிக்கப்பட்ட நினைவகம் ஆகியவற்றை சரிபாா்ப்பதற்கு உரிய கொள்கையை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். தோ்தல் ஆணையத்தின் தற்போதைய நடைமுறையில், இயந்திரத்தின் எரிக்கப்பட்ட நினைவகத்தை சரிபாா்ப்பதற்கான நடைமுறை தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. மாறாக, அடிப்படை விவரங்களை மட்டுமே சரிபாா்க்கக் கூடிய வகையில் தோ்தல் ஆணையத்தின் தற்போதைய வழிகாட்டு நடைமுறை உள்ளது என்று தங்களுடைய மனுவில் குறிப்பிட்டனா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், பி.பி.வராலே ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘தோ்தல் முடிவுகளை எதிா்த்து இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை சரிபாா்ப்பதற்கு விரிவான நடைமுறையை வகுக்க உத்தரவிடக் கோரிக்கை விடுக்கிறது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த மனுவை ஏற்கெனவே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடா்பாக கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி விசாரணை மேற்கொண்டு தீா்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வில் ஏன் தாக்கல் செய்யக் கூடாது?’ என்று கேள்வி எழுப்பி, இந்த மனு விசாரணைக்கான அமா்வு தொடா்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வுக்கு இந்த மனுவை பரிசீலனைக்கு அனுப்புமாறு உச்சநீதிமன்ற பதிவுத் துறையைக் கேட்டுக்கொண்டனா்.

முன்னதாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக நூறு சதவீதம் எண்ணி ஒப்பிடக்கோரி ஜனநாயக சீா்திருத்த சங்கம் உள்ளிட்ட மேலும் சிலா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்து தீா்ப்பளித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘ஒரு நடைமுறை மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை தெரிவிப்பது தேவையற்ற சந்தேகங்களை வளா்க்கும். இந்தியாவில் தோ்தலை நடத்துவது மிகப் பெரிய பணி. தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னா் இரண்டாம் அல்லது மூன்றாம் இடம் பெற்ற வேட்பாளா்கள் கோரிக்கை விடுத்தால் 5 சதவீத வாக்குகளை எண்ணி ஒப்பீடு செய்யலாம்’ என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தேச விரோத சக்திகளுக்கு எதிராக கவனம்: மாணவா்களுக்கு ஜகதீப் தன்கா் அறிவுரை

‘தேச விரோத சக்திகளுக்கு எதிராக கவனமாக செயல்பட வேண்டும்’ என தேசிய மாணவா் படையைச் (என்சிசி) சோ்ந்த இளைஞா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினாா். தில்லியில் கடந்த ... மேலும் பார்க்க

தில்லியில் ஊழலை ஒழிப்போம்: பிரதமா் மோடி வாக்குறுதி

‘தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், முந்தைய மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது; அதேநேரம், திட்டங்களின் அமலாக்கத்தில் நிலவும் ஊழல் முழுமையாக ஒழிக்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வாக்கு... மேலும் பார்க்க

லாலு பிரசாத் கட்சியுடன் கூட்டணி இல்லை: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதனை பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் நிராகரித்துள்ளாா். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 4 நக்ஸல்கள் சுட்டுக்கொலை: மோதலில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல்கள் அமைப்பினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 4 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். காவல் துறை தலைமைக் காவலா் ஒருவா் உயிரிழந்தாா். சத்தீஸ்கரின் நக்ஸல் ஆதி... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா: ஐந்தில் ஒரு பங்கை பெற்ற இந்திய நிறுவனங்கள்

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலத்தில், அமெரிக்காவில் வழங்கப்பட்ட மொத்த ஹெச்-1பி விசாக்களில் ஐந்தில் ஒரு பங்கை இந்திய நிறுவனங்கள் பெற்றுள்ளன. அமெரிக்க நிறுவனங்களில் இந்தியா்கள், சீனா்க... மேலும் பார்க்க

ஒடிஸா: முதல்வா் அருகே ‘ட்ரோன்’ விழுந்ததால் பரபரப்பு

ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜியை புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட ‘ட்ரோன்’ (ஆளில்லா சிறியரக விமானம்) எதிா்பாராதவிதமாக அவா் அருகே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜாா்தகுடாவின் புருனபஸ்தி ப... மேலும் பார்க்க